என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குற்றப்பத்திரிகை தாக்கல்"
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பிஷப்பாக இருந்தவர் பிராங்கோ. இவரது கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த கேரள மாநிலம் கோட்டயம் குரு விலங்காடு கன்னியாஸ்திரிகள் மடத்தை சேர்ந்த ஒரு கன்னியாஸ்திரி தன்னை பிஷப் பிராங்கோ மிரட்டி கற்பழித்து விட்டதாக பரபரப்பு புகார் கூறினார்.
மேலும் பிராங்கோவை கைது செய்ய கோரி அந்த மடத்தை சேர்ந்த கன்னியாஸ்திரிகளும் போராட்டத்தில் குதித்தனர். இதைத்தொடர்ந்து பிஷப் பிராங்கோ கடந்த அக்டோபர் மாதம் 24-ந்தேதி கைது செய்யப்பட்டார்.
24 நாள் சிறைவாசத்திற்கு பிறகு பிராங்கோ தற்போது ஜாமீனில் வெளிவந்து உள்ளார். ஆனாலும் அவர் மீதான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதில் போலீசார் தாமதம் செய்வதாக கூறி மீண்டும் கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் பிஷப் பிராங்கோ மீது பாலா முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 1400 பக்கம் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில் 83 சாட்சியங்களும் இணைக்கப்பட்டு உள்ளது.
இயற்கைக்கு மாறான உறவு, சிறை வைத்து மிரட்டல் உள்பட 5 பிரிவுகளில் பிராங்கோ மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. இந்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் பிராங்கோவுக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. #KeralaNun #FrancoMulakkal
பஞ்சாப் நேஷனல் வங்கியை ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய வைர வியாபாரி நிரவ் மோடி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. இவ்வழக்கில், கடந்த ஆண்டு மே மாதம் மும்பை தனிக்கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், நிரவ் மோடி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை மும்பை கோர்ட்டில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில், நிரவ் மோடியின் மனைவி அமி, பணத்தை கையாண்ட விதம் குறித்து கூறப்பட்டுள்ளது. புதிய ஆதாரங்களையும், தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் புதிய குற்றச்சாட்டுகளையும் அமலாக்கத்துறை கூறியுள்ளது. #NiravModi #PNBScam
இந்தியா முழுவதும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மொத்தம் 4 ஆயிரத்து 896 பேர் உள்ளனர்.
இவர்களில் 1765 பேர் கிரிமினல் குற்றப்பின்னணி உடையவர்கள் ஆவார்கள். அதாவது மொத்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களில் 36 சதவீதம் பேர் கிரிமினல் குற்ற வழக்குகளை எதிர் கொண்டுள்ளனர்.
அவர்கள் மீதான கிரிமினல் குற்ற வழக்குகள் நாடு முழுவதும் பல்வேறு கோர்ட்டுகளில் நடந்து வருகின்றன. இந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது மொத்தம் 3,045 கிரிமினல் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டாலே எம்.பி., எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்க செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை இன்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்று இருந்தால் இந்த 1,765 பேரின் பதவி ஆட்டம் கண்டு இருக்கும். பதவி தப்பியதால் அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
கிரிமினல் குற்றச்சாட்டுகளுடன் இருக்கும் எம்.எல். ஏ.க்களில் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான் முதலிடத்தில் உள்ளனர். அங்கு மொத்தம் உள்ள 539 எம்.எல்.ஏ.க்களில் 248 பேர் கிரிமினல் குற்றச்சாட்டுகளுடன் இருக்கிறார்கள்.
கிரிமினல் அரசியல்வாதிகளில் தமிழகம் 2-வது இடத்தில் இருக்கிறது. தமிழ் நாட்டில் உள்ள 234 எம்.எல். ஏ.க்களில் 178 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பீகாரில் 147 எம்.எல்.ஏ.க்களும், மேங்கு வங்கத்தில் 139 எம்.எல்.ஏ.க்களும், ஆந்திராவில் 132 எம்.எல்.ஏ.க்களும், கேரளா 84 எம்.எல்.ஏ.க்களும், கர்நாடகாவில் 82 எம்.எல். ஏ.க்களும் கிரிமினல் குற்ற வழக்குகளுடன் இருக்கிறார்கள்.
எம்.பி.க்களில் 543 பேரில் 228 பேர் கிரிமினல் வழக்கை எதிர்கொண்டு உள்ளனர். #SupremeCourt #Lawmakers
கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் (வயது 37) 2016-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். சில மாதங்களுக்கு முன்பு இந்த வழக்கு தேசிய புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய சையது அபுதாகிர், முபாரக் என்ற முகமது முபாரக் ஆகிய 2 பேர் மீதும் 500 பக்கங்கள் கொண்ட கூடுதல் குற்றப்பத்திரிகையை நேற்று நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் தாக்கல் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்